அவந்திகாவின் பெவிலியன்

:: .குட்டீஸ் கார்னர் . ::

பேபி பவனின் படங்கள்

சிகாகோ தமிழ்

குவைத் மழலைகள்

மழலைச் சொல்

ஒரு குட்டித் தோட்டம்

Sunday, April 29, 2007

அறிவியல் தளங்கள் - முத்துலட்சுமி

பள்ளியில் சொல்லிக்கொடுக்கும் பாடங்கள் தவிர்த்து குழந்தைகளுக்கு அதிக நேரமிருந்தால் அல்லது அதிகப்படியான கேள்விகள் கேட்கிற குழந்தைக்கு விளக்கவேண்டி இருந்தால் இந்த மாதிரி தளங்களுக்கு சென்று அவர்களுக்கு புரியும் படி அறிவியலை அறிமுகப்படுத்தலாம். சிலசமயம் பள்ளி தவிர்த்து வெளியே நடக்கும் தனிப்பரிட்சைகளுக்கு தயார் படுத்த என்கிற போதும் உபயோகமாக இருக்கும். தனிப்பரிட்சைகளில் பாடத்திட்டத்தின் அடுத்த நிலைக்கேள்விகள் தான் அதிகம் கேட்கப்படுகின்றன. வருடத்தின் ஆரம்பத்திலேயே நடக்கும் இத்தகைய பரிட்சையில் அந்த வருடத்தின் கடைசியில நடக்கப்போகும் பாடத்தின் கேள்விகள் கூட கேட்கப்படுகினறன.

எலும்புகள் மூளை , சீரண செயல்பாடுகள் , மற்றும் இதயம் பற்றி குழந்தைகளுக்கு பாடத்தில் சிறிதளவே விஷயம் சொல்லிக்கொடுக்கப்படும் அதனையும் தாண்டி அறிந்துகொள்ள
www.medtropolis.com/VBody.asp இங்கே நீங்கள் விர்ச்சுவலாக காட்டப்படும் படங்களால் விளக்கினால் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்வார்கள். மேலும் இது மறந்து போன பாடங்களை நினைவுக்கு கொண்டுவர பெரியவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

இன்னொரு தளம் www.hhmi.org/coolscience இங்கே கேள்வி பதிலாக விலங்கினங்களை வகை பிரிக்கவும் அறிந்துகொள்ளலாம்.

http://www.toonuniversity.com/planets_demo.swf இங்கே சென்றால் சூரியனையும் மெர்குரியையும் பற்றி ஃப்ளாஷ் டெமோ வில அழகாக காண்பிக்கிறார்கள்.. மீதி ?? காசுகுடுத்தால் தான்.



இது போன்ற மற்ற தளங்கள் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருந்தால் எனக்கு மறுமொழியில் அறிமுகப்படுத்துங்கள் . இத்தளங்கள் மிகச்சமீபத்தில் சென்று படித்ததால் எழுதி இருக்கிறேன் இவையல்லாமல் மற்றவை இப்போது நியாபகத்தில் இல்லை.

குழந்தைகளுக்கான சிலதளங்கள் இது முன்பு எழுதிய இன்னோரு பதிவு

நன்றி முத்துலட்சுமி

1 comment:

சிறில் அலெக்ஸ் said...

try using pageflakes. it is impressive. you can add a lot more for kids than just the feeds.